திடீரென மருதமுனைக்கு களவிஜயம் மேற்கொண்ட அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டவ்ளியூ. டீ. வீரசிங்க : பிரதேச குறைநிறைகளையும் ஆராய்ந்தார் !



மாளிகைக்காடு நிருபர்-
மிக நீண்டகாலமாக பாவிப்பதில் பல்வேறு சிக்கல்களை கொண்டுள்ள மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் மருதமுனை வீட்டுத்திட்ட ஆற்று ஓடைகள் என்பவற்றின் நிலைகளறிந்து அவற்றுக்கான நிரந்தர தீர்வை பெறுதல் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய கள விஜயம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவ்ளியூ. டீ. வீரசிங்க தலைமையிலான குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மருதமுனை பிராந்திய முக்கியஸ்தர் இசட். ஏ. நௌஷாடின் அழைப்பின் பேரில் குறித்த இடங்களுக்கு விஜயம் செய்த அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவ்ளியூ. டீ. வீரசிங்க தலைமையிலான குழுவினர் மைதானத்தின் நிலைமைகளையும், மருதமுனை வீட்டுத்திட்ட ஆற்று ஓடைகளின் தற்கால நிலைமைகளையும் ஆராய்ந்ததுடன் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

மிகவும் மாசு படிந்துள்ள குறித்த இடங்களின் முக்கியத்துவம், இந்த இடங்களில் மக்களினது தேவைகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவ்ளியூ. டீ. வீரசிங்கவுக்கு விளக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மருதமுனை பிராந்திய முக்கியஸ்தர் இசட். ஏ. நௌஷாட் இவ்விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :