காரைதீவு பிரதேசசபைக்கு மாத்தளை மேயர் விஜயம்வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு பிரதேசசபைக்கு மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் நேற்றுமுன்தினம் விஜயம் செய்தார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவரையும் அவருடன் வருகைதந்த மாநகரசபை உறுப்பினர்களான ரி.எஸ்.மோகன் சந்திரசேகரம் ராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் மாலைசூட்டி வரவேற்றார்.
தவிசாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாத்தளை மாநகரசபை முன்னெடுத்துவரும் முற்போக்கு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.எதிர்காலத்தில் காரைதீவுப்பிரதேசத்திலும் அவற்றை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பிரதேசசபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் ,சுபா, தினேஸ் உள்ளிட்ட சபை உத்தியோகத்தர்களும் சமுகமளித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :