கிழக்கில் 722 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம்!ஜன.3முதல் அமுல்:பதிலீடாக 755ஆசிரியர்கள் இடமாற்றம்!
இன்றுமுதல் கடிதங்கள்:4வலயங்களுக்கான இடமாற்றம் நிறுத்தம்!
கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் புள்ளநாயகம் தெரிவிப்பு.
வி.ரி.சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்தில் வருடாந்த ஆசிரியர்இடமாற்றத்தின்கீழ், இம்முறை 722ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பதிலீடாக 755ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2022ஜனவரி 3ஆம் திகதி முதல் இது அமுலுக்குவருகிறது.

இவ்வாறு கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார். வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் பற்றிக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:

கொரோனாவுக்குப்பின்னரான தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகள் இயங்கத்தொடங்கியுள்ளன. அதேவேளை வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களில் பொருத்தமான 722பேர் இடமாற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களது இடமாற்றத்தால் ஏற்படும் பாடரீதியான வெற்றிடத்தை நிரப்புவதற்கு வசதியாக 755ஆசிரியர்கள் கூடவே இடமாற்றப்படுகின்றனர்.

அவர்களுக்கான இடமாற்றக்கடிதங்கள் இன்று(19)வெள்ளி முதல் வலயம் வலயமாக அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றன. மேன்முறையீடு செய்யவிரும்புவர்கள் மார்கழி 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

4வலயங்களில் இடமாற்றம் நிறுத்தம்;!
இதேவேளை இவ்விடமாற்றங்கள் நான்குவலயங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.சமப்படுத்தலின்பின்னர் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்முனை திருமலைவடக்கு மூதூர் மகாஓயா ஆகிய நான்கு கல்வி வலயங்களுக்கு இடமாற்றப்பட்டோர் அவ்வலயங்களுக்கு தற்சமயம் செல்லமுடியாது. ஆனால்,அங்கிருந்து வேறு வலயங்களுக்கு வருடாந்த இடமாற்றத்தில் இடமாற்றம் பெற்றவர்கள் குறித்தவலங்களுக்கு செல்லவேண்டும்.
அங்கு ஏலவே ஆசிரியர்கள் மிதமிஞ்சிகாணப்படுவதால இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சமப்படுத்தல் இடமாற்றம் இடம்பெற்றபின்னர் இவ் வருடாந்த இடமாற்றம் அங்கு அமுலாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :