அட்டாளைச்சேனையில் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் விசேட கலந்துரையாடலும்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
க்கிய இளைஞர் சக்தியில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள்
பற்றிய கலந்துரையாடலும் நேற்று (18) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான முகம்மட் சர்பான் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அதிதியாக அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தரும், பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான ஆஷிக் சுபைர் கலந்து சிறப்பித்தார்.

அப் பிரதேச இளைஞர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள்
பற்றி மிகச் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது அங்கத்துவப்படிவத்தைக் கையளித்து அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர்.
அத்துடன் எதிர்காலத்தில் தாங்கள் ஐக்கிய இளைஞர் சக்தியோடு கைகோர்த்துச் செயற்படத் தயாராக உள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் இதன்போது உறுதியளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :