அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சியில் அபிவிருத்தியை நோக்கி பாலமீன்மடு வைத்தியசாலை!



மீன் பாடும் தேன் நாடாகம் மட்டு மாநகரின் மீனவர் சமுதாயத்தை பெரும்பான்மையாகக் கொண்டு அமையப்பெற்றதே இந்த பாலமீன்மடு கிராமம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் ஏறத்தாழ சுமார் ஆயிரம் பேர்கள் வாழும் இந்த கிராமத்திற்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
மட்டு வாவி,பறவைகள் வந்து செல்லும் தீவுகள் என பல இயற்கை அழகோடு சுமார் 50 வருடம் பழமை வாய்ந்த வெளிச்சவீடும் இந்தப் பகுதிக்கு அதிகமான பயணிகளைக் கவர்கின்றது.
சுற்றுலாப்பயணிகள் அல்லது கிராம மக்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் குறித்த பாலமீன்மடு கிராமத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஏறத்தாழ 14 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஏறாவ10ர் ஆதார வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

குறித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட பகுதில் எந்தவொரு வைத்தியசாலைகளும் இல்லாததினால் பாலமீன்மடு மக்கள் மாத்திரமல்லாமல் சுற்றியுள்ள பல கிராம மக்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதனை கருத்தில் கொண்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக கிராம மக்கள் முன் வைத்த கோரிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் பயனாக 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 25 ஆம் திகதியன்று அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஏ. கே. பத்மநாதன் அவர்களால் இந்த பாலமீன்மடு அரசாங்க மருத்துவமனைக்கு அடிக்கள் நாட்டப்பட்டு 1996 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டளவில் 24 கட்டில்களைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து 1999 ஆம் ஆண்டளவில் பற்சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டளவில் கிராமிய வைத்தியசாலை பாலமீன்மடு என்ற பெயருடன் தரமுயர்த்தப்பட்டது.
சுமார் 15 முதல் 20 வரையான கிராம மக்கள் தற்போது வரை குறித்த பாலமீன்மடு மத்திய மருந்தகத்தையே தமது வைத்திய தேவைகளுக்காக நாடுகிள்றனர்.
ஆரம்பிக்கப்ட்ட நாளில் இருந்து அன்று வரை சுமார் 300 தொடக்கம் 400 வரையான வெளிநோயாளர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்றதான சுனாமி ஆழிப்பேரலையின் தாக்கத்திற்கு உள்ளாகிய போதிலும் கட்டங்களுக்கு எவ்வித சேதமுமின்றி சுமார் ஒரு வார காலத்திற்குள் வெளிநோயாளர் பிரிவு மிண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை குறித்த பாலமீன்மடு வைத்தியசாலையின் அநேகமான சேவைகளும் விடுதிகளும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது பெரும் வேதனையான விடயமாக காணப்படுகின்றது.
குறித்த பாலமீன்மடு வைத்தியசாலை தொடர்பான விடயங்களை மக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாகிய கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் தெளிவுபடுத்தியிருந்த நிலையில் கடந்த மாசி மாதம் 16 ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் பாலமீன்மடு வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலமை மற்றும் தேவைகள் குறித்து ஆராய்தார்.
இதன்போது வைத்தியசாலையின் பாதுகாப்பிற்காக சுற்று மதில் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் அறை அமைத்தல், சமையலறை திருத்தம், குடிநீர்ää காணி மற்றும் வைத்தியசாலைக்கான கட்டிடங்கள் போன்ற தேவைப்பாடுகளையும் சுனாமி பேரழிவின் பின்னர் மூடப்பட்ட விடுதியினை மீள ஆரம்பிப்பதோடு மேலதீகமாக வைத்திய விடுதிகளையும் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை மக்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் முன் வைத்திருந்தனர்.

இவ்வாறிருந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளின் பயனாக தற்போது பாலமீன்மடு மத்திய மருந்தகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.
கடந்த ஆவணி மாதம் 12 ஆம் திகதி பாலமீன்மடு வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்திபணிகளை நேரில் பார்வையிட்டதோடு விரைவில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலனாக தற்போது ஆரம்ப சிகிச்சைப் பிரிவாக இயங்கிய பாலமீன்மடு வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக சுகாதார அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்றதான சுனாமி ஆழிப்பேரலையின் தாக்கத்திற்கு பின்பு சுமார் 17 வருடங்களாக எந்தவொரு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாமலிருந்த குறித்த பாலமீன்மடு வைத்தியசாலை விரைவில் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் அங்குரார்பண வைபவம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் ஊடக இணைப்பாளர்
ராஜரத்தினம் சுரேஷ்குமார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :