உபவேந்தர் பேராசிரியர் றமீஸுக்கும் அவரது தாய்க்கும் கல்விசாரா ஊழியர்களின் கௌரவம்!(படங்கள்)Updateஎம் வை அமீர்-
ண்மையில் தெரிவான தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரையும் அவரது தாயாரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2021.11.04 ஆம் திகதி மாளிகைக்காடு ‘பாவா றோயல் ‘ வரவேற்பு மண்டபத்தில், நிகழ்வின் தலைவர் சி.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
உயர் கல்வியாளர்களை உற்பத்தி செய்யும் உயர் நிறுவனங்களில் ஒன்றான
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக அண்மையில் ஜனாதிபதி கோத்தாபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள அப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர், பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரையும் அவரது தாயார் மற்றும் உடன்பிறப்புகளையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களாக பணியாற்றும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் கல்முனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில், தற்போது கடமையில் உள்ள ஒரேயொரு இளம் உபவேந்தரான சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரையும் அவரது தாயாரையும் அவர் பிறந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கும் இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அல் ஹாஜ் எச். அப்துல் சத்தார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தது சிறப்பு அம்சமாகும்.

நிகழ்வை ஏற்பாடு செய்த எற்பாட்டுக் குழுவின் செயலாளர் எஸ். கலீலுடைய வரவேற்பு உரையுடன் ஆரம்பமான உணர்வுபூர்வமான நிகழ்வு, பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் பற்றி நிகழ்வின் தலைமை சி.எம்.முனாஸ் தந்த நீண்ட உரையுடன் தொடர்ந்தது.
உபவேந்தரின் தாயாருக்கும் உபவேந்தருகும் பொன்னாடைகள் போர்த்தும் நிகழ்வும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

எம்.எfப்.லுfப்னா வாழ்த்துப்பாவினை வழங்கினார். நிகழ்வை மெருகூட்டிய பதிவாளர் அல் ஹாஜ் எச். அப்துல் சத்தாருடைய உரை மற்றும் கௌரவம் பெற்ற உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் ஆகியோரது உரைகள் சபையோரை ஊர்ந்து கவனிக்க வைத்தது.

வறுமையிலும் தனது தாயார், முட்டை உரிப்பது என்றாலும் அது அரச உத்தியோகத்தில் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்று கூறி, கல்விகற்க தந்த ஊக்கங்களை நா தழுதழுக்க உபவேந்தர் றமீஸ் ஆற்றிய உரை கல்விக்கு வறுமை ஒரு பொருட்டேயல்ல என்பதை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :