மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்திற்கு மாத்தளை மேயர் விஜயம்வி.ரி.சகாதேவராஜா-
மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்தார்.

ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவரையும் அவருடன் வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் ரி.எஸ்.மோகன் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் மாலைசூட்டி வரவேற்றார்.

ஆலயத்தை சுற்றிகாட்டிய தவிசாளர் புதிய ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெறுவதனையொட்டி பணிகள் இடம்பெற்றுவருவதனையும் காட்டினார்.

ராஜநாகம் வதியும் பிரதான புற்றினை வழிபட்ட மாத்தளைமேயர் பிரகாஷ் அதன் புனரமைப்பிற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.அதேவேளை மகாகும்பாபிசேகத்திற்கு வருகைதருமாறும் தலைவர் அழைப்புவிடுத்தார்.

பின்னர் மேயர் பிரகாஸ் குழுவினர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் விஜயம்செய்து தரிசித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :