நிந்தவூர் அல்-அஷ்ரக்கில் இருந்து 48 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 வருட காலத்தில் இருந்து மாணவர்களின் பல்கலைக்கழக உட்பிரவேசம் அதிகரித்து வருகின்றமை இப்பாடசாலைக்கு நாடளாவிய ரீதியில் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளது.

இதற்காக உழைத்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், அண்மைக்காலமாக சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, பாடசாலையின் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பான முன்னேற்றத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கின்ற கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :