கல்குடாவில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை - மூவர் கைதுஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
ல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுள்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியினை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்மாசிங்ஹ வழிகாட்டலில் மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து வியாழக்கிழமை மாலை ஆயுள்வேத மசாஜ் நிலையத்தினை முற்றுகையிட்ட போது அங்கிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவிசாவல மற்றும் பொலனறுவை பகுதியினைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்கள் எனவும், இவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 19ம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :