தற்பொழுது வெளியாகியுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது உளப்பூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்று சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைததவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
கல்வியின் மூலம்தான் ஒரு சமுதாயம் உயர்வு பெறமுடியும் என்பதில் என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன்நான்.
அந்தவகையில் இப்பரீட்சையில் சித்தியடைந்துவிட்டோம் என்று நின்று விடாது க.பொ.த. உஃத பரீட்சையிலும் சிறந்த பெருபேறுகளைப்பெற்று பல்கழைக்கழகம் வரை சென்று எமது சமூகத்துக்கும் இநாட்டுக்கும் சேவை செய்யக்கூடிய நற்பிரஜைகளாக மிளிர வேண்டுமென வாழ்த்துகின்றேன் .
அதே நேரம் சித்தியடையாத மாணவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சித்து அதிலும் இயலாமல் போனால் தாம் விரும்பிய ஏதோவொரு துறையில் முன்னேற வேண்டுவதோடு இந்த பரீட்சையில் கூடுதலான எமது பிரதேச பாடசாலைகள் சிறப்பான பெருபேறுகளை பெற்றுள்ளன. அந்தவகையில் இதற்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வியலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
0 comments :
Post a Comment