ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகள் க.பொ.த சாதாரண தரத்தில் சாதனை – கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளின் படி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டம் சாதனை படைத்துள்ளதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தெரிவித்தார்.

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் சித்தி வீதத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இம்முறை இரு மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவர்கள் 9A சித்தி பெற்றமை விசேட அம்சமாகும்.

அத்துடன், செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயத்தில் இம்முறை 9A சித்தி கிடைத்தமை வரலாற்றுச் சாதனையாகும்.

மேலும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா, மீராவோடை அல்ஹிதாயா, வாழைச்சேனை ஆயிஷா, வாழைச்சேனை அந்நூர் ஆகிய பாடசாலைகளில் கடந்த காலங்களை விட இம்முறை 9A சித்தி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

அந்தவகையில் ஓட்டமாவடி கோட்டத்தில் இம்முறை 24 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

இச் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்களுக்கும் அவர்களின் கற்றலுக்கு பங்களிப்பு செய்த எமது பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் செயலட்டைகளை தயாரிப்பதற்காக அனுசரணை வழங்கிய தனவந்தர்கள், கல்குடா சகாத் நிதியம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலட்டைகளை பிரதி செய்வதற்கு உதவிய எஸ்.எம்.கடாபி ஆசிரியர் உட்பட அனைவருக்கும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தனது நன்றிகளை தெரவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :