கிழக்கில் தொற்றுக்கள் மரணங்கள் தணிகின்றன! எனினும் ஆபத்துநீங்கவில்லை:48ஆயிரம்தொற்றுக்கள்: மரணங்கள் 880!



மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்!
வி.ரி.சகாதேவராஜா-
கிழக்குமாகாணத்தில் அண்மைக்காலமாக மரணங்களின் எண்ணிக்கையும், தொற்றும் வீதமும் குறைவடைந்து வருகின்றன. இருந்தபோதிலும் மரணங்களின் எண்ணிக்கை 880ஜத் தாண்டியுள்ளது. இதுவரை 881 மரணங்கள் சம்பவித்துள்ளன.எனவே ஆபத்து நீங்கவில்லை.மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

இதுவரை திருமலை மாவட்டத்தில் அதிகூடிய 313பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 298 பேரும், கல்முனையில் 160பேரும் ,அம்பாறையில் 110பேரும் மரணித்துள்ளனர்.

வழமைக்குமாறாக ,கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொற்றுகளும், மரணங்களும் நான்கு மடங்காக அதிகரித்துக்காணப்பட்டன. ஆனால் கடந்த ஒருசில நாட்களாக தொற்றுக்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துவருவதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.

50ஆயிரத்தை தொடும் தொற்றுக்கள்.

கிழக்கில் தொற்றுக்களின் இன்னும் ஒருசிலநாட்களில் 50ஆயிரத்தை தொடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று(16)வரை 48858 தொற்றுக்களும் ,881மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது வழங்கப்படும் தடுப்பூசியின் பின்னர் இத்தொகை குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


கிழக்கில் அதிஆபத்துநிறைந்த பகுதிகளாக தெஹியத்தகண்டிய ,உஹன , அம்பாறை ,தமன கல்முனைவடக்கு ,மகாஓயா ,லாகுகல ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 132பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.05மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

தடுப்பூசிகள்!
கிழக்கில் இதுவரை 17லட்சத்து 3ஆயிரத்து 500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 14லட்சத்து 74ஆயிரத்து 80 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

கிழக்கில் முதலாவது தடுப்பூசிகள் வழங்க 868000 கிடைத்தன. அதில் 804455 ஏற்றப்பட்டன. அதாவது 84வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டன. அதில் கூடுதலாக கல்முனை மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவுகளில் 94வீதமானவர்களுக்கும் திருமலையில் 81வீதமானவர்களுக்கும் அம்பாறையில் 60வீதமானவர்களுக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டன.
இரண்டாவது தடுப்பூசிகள் வழங்க 835500 கிடைத்தன. அதில் நேற்று வரை 669625 பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 72வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.
.
தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல், முகக்கவசம் அணிதல் ,கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்என்றார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :