கிழக்கில் 12ஆதாரவைத்தியசாலைகளிலும் புதிதாக HDU ஆரம்பிப்பு! கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் தகவல்



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கொவிட் நிலைமையைக்கருத்திற்கொண்டு மாகாணத்திலுள்ள சகல 13 ஆதாரவைத்தியசாலைகளிலும் அதிதீவிரசிகிச்சை(ICU) பிரிவுக்கு மேலதிகமாக உயர் நிலை அவதானிப்பு பிரிவு (HDU- High dependent unit) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
இப்புதிய பிரிவில் மிகவும் பாதுகாப்பாக நோயாளிகள் பராமரிக்கப்படுகின்ற அதேவேளை சுகாதாரத்துறையினரும் தொற்றலிருந்து பாதுகாக்கப்படுவர். சாதாரண விடுதி சிகிச்சைக்கும் (ward)அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கும்(ICU) இடைப்பட்ட ஒன்றாக அமையும். இங்கு நோயாளிகள் 24மணிநேரமும் ஏனையோரில் தங்கிருப்பதால் பராமரிப்பு தொடர்ச்சியாகவிருக்கும்.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,நிந்தவூர், பொத்துவில், திருக்கோவில் போன்ற ஆதாரவைத்தியசாலைகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அதிதீவிரசிகிச்சைப்பிரிவு


இதேவேளை, கொரோனாவுக்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவு(ICU) காத்தான்குடி ,களுவாஞ்சிக்குடி வாழைச்சேனை போன்ற ஆதாரவைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களினால் கிழக்கில் கொரோனாத் தொற்றுவீதமும் மரணவீதமும் படிப்படியாக குறைந்துவருகின்றன.

தடுப்பூசிகள் வேகமாக ஏற்றப்பட்டுவருவதனாலும் மரணவீதம் குறைந்துவருவதை அவதானிக்கமுடிகிறது.

இறுதியாக இரண்டாவது டோஸ் ஏற்றியவர்களுக்கு அடுத்த 3 வாரங்களின்பின்னரே அது வேலைசெய்யஆரம்பிக்கும்.எனவே ஊசிபோட்டுவிட்டோமென்று அலட்சியமாக கவனயீனமாக இருக்கவேண்டாம். சுகாதரநடைமுறைகளை அனைவரும் தொடர்ச்சியாக பின்பற்றவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :