சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்களை துரிதப்படுத்துமாறு கோரிக்கைசர்ஜுன் லாபீர்-
ற்போதைய நாட்டின் அசாதாரண கொரோனா சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தின் 5000/- ரூபாய் கொடுப்பனவு உட்பட பல கடமைகளை மக்களோடு மக்களாக இணைந்து கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்தல் மற்றும் அவர்களின் கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை துரித்தப்படுத்துமாறு கல்முனை சமூர்த்தி நலனோம்பல் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி அண்மையில் மரணமடைந்த சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.எச் நளீமின் மரணக் கொடுப்பணவை துரிதப்படுத்தக் கோரியும், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களின் கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாரும் கோரி கல்முனை சமூர்த்தி நலனோம்பல் சங்கத்தினால் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ
லியாக்கத் அலி ஊடாக மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி பணிப்பாளர் நாயகத்திற்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு இன்று (28) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் எம்.சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி உதவி முகாமையாளர்களான எஸ்.எல் ஏ அஸீஸ் ,எம் மன்ஸூர், சமூர்த்தி நலனோம்பல் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.நவாஸ் ,சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.அர்சத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :