பட்டியடிப்பிட்டி மையவாடி உள்ளக வீதி ஒன்பது லஞ்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.நூருல் ஹுதா உமர்-
குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் (PSDG) ஊடாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜனாஸா மையவாடி உள்ளக வீதி அபிவிருத்தி பணிகள் இன்று (28) உத்தியோகபூர்வமாக தேசிய காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான எம் ஏ றாசிக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடிக்கல் நடப்பட்ட பின்னர் இங்கு கருத்து தெரிவித்த தவிசாளர் எம் ஏ றாசிக், ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் பட்டியடிப்பிட்டி மக்களின் நன்மை கருதி இந்த மையவாடியை எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய பட்டியடிப்பிட்டியின் பிதாவாக கருதப்படும் அப்துல் ரஹீம் ஹாஜியாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அழைக்கும் போது மறுப்பு தெரிவிக்காமல் பிரதேச சபையுடன் இணைந்து சிரமதான பணிகளிலும் உடல், பொருளாதார ரீதியாகவும் உதவிகள் புரிந்தோருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ எல் எம் அதாவுல்லாவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எம்.அஸ்ஷார் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யூப், ஏ.ஜி பர்சாத், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல் எம் இர்பான், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.தமீம், பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எஸ். அப்துல் ஹாதி, பட்டியடிப்பிட்டி மையவாடியின் நலன்புரி சங்க செயலாளர் எஸ் நிஸ்பர் உட்பட பலரும் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக இவ் வீதிக்கான அடிக்கல் நடப்பட்டு துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :