ஆசிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்து சாதனை சுட்டி என்றழைக்கப்படும் "க்ரேன்ட் மாஸ்டர்" மகுடத்தை வென்று நாட்டுக்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அனா அண்மையில் ஊடகங்களுக்கு பேசும் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார்.
இக் காணொளியை பார்த்த றிஸ்லி முஸ்தபா உடனடியாக இன்று அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த கெளரவ விளையாட்டு துறை அமைச்சரை அனா சந்திக்க ஏற்பாடு செய்ததுடன் இருவரும் இணைந்து அனாவுக்கு "டெப்" ஒன்றினை பரிசாக வழங்கினர், இந் நிகழ்வில் விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சர் கெளரவ தெனுக விதானகே, அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுபினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ W.D.வீரசிங்க, அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ Dr.திலக் ராஜபக்க்ஷ, வனவிலங்குகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களின் பிரத்தியேக செயலாளர் அஞ்சன திசாநாயக்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிந்தவூர் பிரதேச இளைஞர் இணைப்பாளரும், வனவிலங்குகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் நிந்தவூர் பிரதேச இணைப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண ஆளுனரின் கொரோனா தடுப்பு செயலணியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான ஆதம் பாசித் ஹுஸ்னி அவர்களும் கலந்து கொண்டார்.
அக்குழந்தைக்கு நேற்றையதினம் வழங்கிய வாக்குறுதியை மிகவிரைவாக இன்றே நிறைவேற்றிய றிஸ்லி முஸ்தபாவுக்கு பெற்றோர்கள் தனது நன்றியை தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment