கொத்மலை, ரம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவுக.கிஷாந்தன்-
திகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய கொத்மலை ரம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளரும், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இராணுவத்தினர் தற்போது 275 படுக்கைகள் கொண்ட வசதி மையத்தை நிர்மாணித்துள்ளனர்.

அத்தோடு, வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலைமையை பார்வையிடுவதற்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானி பாரத் அருள்சாமி ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு, நிலைமையையும் ஆராய்ந்துக் கொண்டனர். இதன்போது, இராணுவ அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மேலும், எதிர்வரும் 29ம் திகதி இந்த மையம் சுகாதார பிரிவினருக்கு கையளிக்கப்படும் என பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :