ஒரே நாளில் பலருக்கும் தொற்று : நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-

நிந்தவூர் பிரதேசதிற்குட்பட்ட 07ம் கிராமசேவகர் பிரிவில் ஒரு கொறோனா தொற்றாளர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், 13ம் கிராம சேவகர் பிரிவில் மற்றுமொரு கொறோனா தொற்றாளர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலுமா க இருவர் அடையாளம்காணப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் 07ம் கிராமசேவகர் பிரிவிலும் தொற்றாளராக மூன்று நபர்கள் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்தார்.

பொது மக்கள் யாரும் 100% வீட்டைவிட்டு வெளியில் (பக்கத்து வீடு உட்பட) செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் யாருக்காவது காய்ச்சல், தொண்டைநோவு, மூச்சுவிட கடினமானால் உடன் வைத்தியசாலைக்கு செல்லவேண்டும். அத்துடன் கொரனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுடன் கூடயிருந்தவர்கள் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என பரீட்சித்துக்கொள்ளுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மிக அவசிய விடயங்களுக்காக வெளியில் செல்ல வேண்டி ஏற்பட்டால் முகக் கவசமின்யி செல்ல வேண்டாம், வெளியில் யாரிடமும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று முகக்கவசம் அணிந்து உள்ளவர்களிடம் மட்டும் பேசலாம், வெளியில் சென்று வீட்டுக்கு வந்ததும் முதலில் நன்கு சவர்காரமிட்டு கைகளைக் கழுவுங்கள், பலர் கொறொனா தொற்றுடன் சுகதேகி போன்று உள்ளனர், இவர்களால் உங்கள் முழுக் குடும்பமும் தொற்றால் பாதிக்கப்படும். உங்கள் வீட்டு கேற்றுக்கு அப்பால் முகக் கவசத்துடன் ஒரு மீட்டர் இடைவெளியில் பேசுவது பாதுகாப்பானது என்றும் யாரின் வீட்டுக்கு செல்வதையும் , பிறர் உங்கள் வீட்டுக்கு வருவதையும் இந்த காலங்களில் தவிர்த்து கொள்ளவும், நெருக்கமான கூட்டங்கள் மிகவும் ஆபத்தானது, அதிக தொற்று ஏற்படுவது இப்படியான காரணங்களினாலையே கல்யாணம், மரணவீடுகள், விருந்துகள், சந்தை, போன்றவற்றுக்கு செல்வதில் இருந்து தவிர்ந்துகொள்வது நல்லது என மக்களை கேட்டுக் கொண்டுள்ளதுடன் அனைத்து பொதுமக்களும் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றி எமது பிரதேசத்தை கொறோனா தொற்றிலிருந்து பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :