கல்முனை மாநகரின் மத்தியில் மலசலகூடக் கழிவுகளா? போர்க்கொடி தூக்கிய மாநகரசபை உறுப்பினர் ராஜன்.வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை மாநகரின் மத்தியிலுள்ள பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனைகருகாமையிலுள்ள கல்லடிக்குளம் எனும் பிரபலமான நீர்ப்பாசனக்குளத்தினுள் மலசலகூடக்கழிவுகள் கொட்டப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தை அறிந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்கு நேரடியாக விரைந்து கழவுகள் கொட்டப்படுகையில் கையும் மெய்யுமாக பிடித்து அமர்க்களப்படுத்தினார் .

சம்பவம் பற்றித்தெரியவருவதாவது:
கடந்த மூன்று தினங்களாக கல்முனை மாநகரசபைக்குச் சொந்தமான களிசக்கர் வவுசர் அவ்விடத்தில் மலசலகூடக்கழிவுகளை கொட்டிவருவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று அதனை கையும் மெய்யுமாக பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், கந்தசாமி சிவலிங்கம் ஆகியோர் ஊடகவியலாளர்களுடன் தயாராகவிருந்தனர்.

இருப்பினும் தகவல் கசிந்ததோ என்னவோ அவர்கள் வரவில்லை.அதனால் இவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும் முயற்சியைகைவிடாது உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மீண்டும் ஒரு மணிநேரத்தின்பின்னர் அங்கு சென்றதும் குறித்த வவுசர் மருதமுனைப்பக்கமிருந்து மலசலகூடக்கழிவுகளைக் கொண்டுவருவதைக்கண்டார். உடனே ஊடகவியலாளர்களுக்கு அறிவித்து வரவழைத்து வீடியோ புகைப்படங்களை பதிவுசெய்தார்.

கல்முனை நகரின் மத்தியிலுள்ள கல்லடிக்குளமானது கல்முனைக்கண்டத்தின்  413ஏக்கர் வயல்காணிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் பாரிய குளமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :