அட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுக.கிஷாந்தன்-
ட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபாலகத்தில் பணி புரிந்த இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 17 அட்டன் தபால் ஊழியர்களை ரெபிட் எண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை பயணக்காட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :