கண்டி – போகம்பறை சிறைச்சாலையில் 20க்கும் அதிகமான கைதிகள் கட்டட கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் போராட்டத்தை இன்று பகல் கைவிட்டுள்ளனர்.
பி.சி.ஆர் பரிசோதனை தாமதமாகிறது என தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணை யாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை கைதிகள் பழைய போகம் பறை சிறைச்சாலைக்கு அழைத் துவரப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது வழமையானது. அத்தோடு, 10 ஆம் நாள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12 ஆம் திகதி சிறைச்சாலைக்கு வருகை தந்த சிறை கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சிறைச்சாலை கைதிகளுக்கு எதிர்வரும் 22ஆம் திகதி பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடபட்டிருக்கின்றது.

0 comments :
Post a Comment