கிழக்கின் ஒரு சிறந்த அரசியல் தலைமையின் மறைவு பெரும் பேரிழப்பாகும்.-முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கின் ஒரு தலை சிறந்த அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் ,முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹிதபோகொல்லாகம தெரிவித்துள்ளார். முன்னால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் க. துரைரட்ணசிங்கம் அவர்களின் மறைவு குறித்து இன்று (18)விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய முதல் வருகையின் போது ஒன்றாக என்னுடன் பயணித்த ஒரு சிறந்த மனிதர் .இவரது ஆத்மா சாந்தியடையவும் இவரது குடும்பத்தாருக்கு உள அமைதியை பெறவும் வேண்டுகிறேன் இவரது மறைவு குறித்து கவலயடைகிறேன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன் இவர் தமிழ் மக்களுக்கான பிரதிநிதியல்லாமல் முழு சமூகத்துக்காகவும் ஒன்றினைந்து செயற்பட்டவர் கிழக்கு ஆளுனராக இருந்த போதும் என்னுடன் உள்ள உறவு மறக்க முடியாது கிழக்கு மக்கள் மத்தியில் சமூகம்சார் பிரச்சினை தொடர்பிலும் முன்வைத்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்துக்கு முன்னூதாரணமாக திகழ்ந்தவர் என்றும் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :