வலதுகுறைந்தோருக்கு தேடிச்சென்று உலருணவு நிவாரணம் வழங்கிய தவிசாளர்.கவி.ரி.சகாதேவராஜா-
மகால கொரோனா பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பார்வைத்திறனற்ற மற்றும் வலது குறைந்தோருக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களைத்தேடிச்சென்று ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினருக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை அவர் வழங்கிவைத்தார். லண்டன் வசீகரன் அறக்கட்டளை நிதியம் அதற்கான அனுசரணையை வழங்கிவைத்தது.

அதேபோல் புதுர் மற்று கரடியனாறுபப்pரதேசத்திலுள்ள வலதுகுறைந்தோருக்கும் இத்தகைய உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தார். கனடா அசோகன் தம்பதியின் ஆதிரா பவுண்டேசன் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.

அம்பாறைமாவட்டத்திலிருந்து மட்டக்களப்பிற்கு தேடிவந்து இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில் காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தமது நன்றிகளை தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :