தமிழக அரசியல் பிரமுகர் முஹம்மத் யூசுப் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்மிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் நண்பர் முஹம்மத் யூசுப் சுகவீனமுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான செய்தியறிந்து, அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
கட்சியின் பொருளாளர் என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்து வந்த நண்பர் யூசுப் அதன் தலைவர் தோழர் திருமாவளவனின் வலது கரமாகச் செயற்பட்டவர்.
அன்னாரின் ஜனாஸாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும், ஏனையோராலும் கட்சித் தலைமையகம் அம்பேத்கரில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டதோடு, நல்லடக்கம் சாலி கிராமத்தில் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதையையும் அறிந்தேன்.

எனது கனிஷ்ட புத்திரியின் திருமண நிகழ்வில் தோழர் தொல்மாவளவன் சார்பிலும், தனிப்பட்ட விதத்திலும், மறைந்த நண்பர் முஹம்மத் யூசுப், கட்சியை சேர்ந்த சக நண்பர் ஆளுர் ஷா நவாஸ் சகிதம் நேரில் வந்து கலந்து சிறப்பித்ததையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.

அன்னாருக்கு அல்லாஹ் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அருள்வதோடு, அவரது பிரிவினால் துயருற்றிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிப்பானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :