1995 நவம்பர் 25ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தில் சேவையைத் தொடங்கிய இவர், பதிவாளர் அலுவலகம், உபவேந்தர் காரியாலயம், பிரயோக விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பணியாற்றியதோடு, மாணவர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகிய அனைவருடனும் அன்போடு பழகிய பண்பால் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்திருந்தார்.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். எம். ஜுனைதீன் மற்றும் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில், பணிக்கொடை நிதி உபவேந்தர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும், பதில் பதிவாளர் அவர்களால் றிபாயிஸ் முகமது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
ஊழியர் சங்க நலன்புரி நிதியினை நலன்புரி நிதியத்தின் தலைவர் வை. முபாரக், பொருளாளர் எம். எச். நசார், செயலாளர் எம். எம். ரம்சின் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
மேலும், ஊழியர் சங்கத் தலைவர் சி. எம். அஹமட் முனாஸ், நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஓய்வு பெறும் சகோதரர் றிபாயிஸ் முகமது அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இவரது ஓய்விற்குப் பின் வாழ்க்கை குடும்பத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாக பொதுச் செயலாளர் எம். எம். முகமது காமில் உள்ளிட்ட சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களும் சக ஊழியர்களும் கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment