ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவு இல்லை என்கிறார் யஹியாகான்!



லங்கை தமிழரசுக் கட்சியின் - ஹர்த்தால் அழைப்புக்கு - முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளது. இதனை ஒருபோதும் நாங்கள் ஏற்கத் தயாரில்லை என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

வடக்கும் கிழக்கும் முஸ்லிம் மற்றும் தமிழர் தாயகம் என்று கூட கூற முடியாத , திராணியற்ற தமிழரசுக் கட்சிக்கு எவ்வாறு நாங்கள் ஆதரவளிப்பது என்றும் யஹியாகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த தமிழரசுக் கட்சி - ஹர்த்தாலுக்காக முன்வைத்த காரணிகளில் ஒன்று கூட முஸ்லிம் சமுகம் சார்பாக எதையும் முன்வைக்கவில்லை.
முஸ்லிம் சமுகம் - கடந்த காலங்களில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதைக் கூட மறந்து அல்லது மறைத்து நாடகமாடும் இந்த கபட ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவது என்பது அபத்தமானது.
ஆகக் குறைந்தது - கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் - முஸ்லிம் சமுகத்துக்கு சாதகமான களநிலவரம் இருக்கும் போது கூட - அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் தமிழரசு கட்சியுடன் - பிரதேச சபைகளை கைப்பற்ற ஒன்று படும் தமிழரசுக் கட்சியுடன் குதுகலம் காணும் முஸ்லிம் காங்கிரஸ் குறித்து மக்கள் விழிப்பாகவே உள்ளனர்.

எனவே - நாளை மறுநாள் - தமிழரசுக் கட்சி விடுத்திருக்கும் ஹர்த்தால் அழைப்பை முஸ்லிம் சமுகம் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு - அரசாங்கத்தை சங்கடத்துக்கு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதனை - எமது கட்சி நோக்குவதாகவும் பார்ப்பதாக யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :