தீர்வின்றேல் தொடர்போராட்டம்! தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ்.-வேலை நிறுத்த போராட்டத்தில் அன்றாட செயற்பாடுகள் முடக்கம்!!



ல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று 2025.08.20 ஆம் திகதி பல்கலைக்கழக முற்றலில் அமைதிவழி வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்க நிலையை அடைந்திருந்தன.

ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். முனாஸ் தலைமையில் 20.08.2025ஆம் திகதி புதன்கிழமை முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் பேரணியிலும் ஈடுபட்ட ஊழியர்கள். பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஒலுவில் பிரதான வீதிவரை ஊர்வலமாகச் சென்றனர்.

நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இந்த முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

பொதுச் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் உள்ளிட்ட ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஊழியர்களும் பங்குகொன்டனர்.















 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :