இப்பயிற்சி பட்டறையின் மூலம் மாணவர்கள் தமது தொழில்முறை திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள், அழகுசாதனை துறையில் புதிய போக்குகள், வாடிக்கையாளர் சேவை முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஹாஷிம் உமர் அறக்கட்டளையின் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர், மாணவர்களின் முயற்சிகளை பாராட்டி, கல்வியுடன் இணைந்து தொழில்திறன் கற்றல் சமூக முன்னேற்றத்திற்குத் தேவையான முக்கியமான அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும், இத்தகைய பயிற்சிகள் இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பின்னர், அவர் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் பாரியார், பல்வேறு விருந்தினர்கள், அகாடமியின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் இணைந்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முடிவில், மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி மற்றும் கற்றலுக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, தமது தொழில்முறை பயணத்தில் பெரும் ஊக்கமாக அமைந்ததாகக் குறிப்பிட்டனர்.





0 comments :
Post a Comment