பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார் !நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை கல்விவலய சம்மாந்துறை அல்-அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் கடந்த 18 திகதி திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்று அலுவலகத்தில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக 19ம் திகதி பாடசாலை அதிபரினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து போதைப்பொருளுக்கு அடிமையான 21, 23, 25 வயதான மூன்று இளைஞர்கள் திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகே. சதீஸ்கரண், முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி ஜெனோஜன் மற்றும் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஜெயக்குமார், துரைசிங்கம் போன்றோரினால் இந்த திருட்டுசமபவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சுமார் மூன்று லட்சத்திட்கும் அதிகமான பெறுமதியை கொண்ட பொருட்களான போட்டோ கொப்பி இயந்திரம், கணனி பாகங்கள், கணனி திரை, கைவிரல் அடையாளமிடும் இயந்திரம், ஒலிபெருக்கி சாதனங்கள், கொரோனா தொற்று பரிசோதனை கருவி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகே. சதீஸ்கரண் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :