சம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திருந்தோருக்கு அண்டிஜன் பரிசோதனை; சுகாதாரதுறை அதிரடி!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் வீதிகளில் உலாவித்திரிவோர், நடமாடும் வியாபாரிகள் என 50 பேருக்கு எழுமாறாக இன்று (25) அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழிகாட்டுதலில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில் சுகாதார பரிசோதர் குழு,பொலிஸ், இராணுவத்தினர் பங்களிப்புடன் இடம் பெற்றது. இப் பரிசோதனையின் போது சுமார் 50 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாம் அலையின் தாக்கம் சுமார் இது வரை 28 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இவ்வாறு நிலமை தொடருமாயின் எமது பிரதேசத்தை முடக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் மேலும் தெரிவித்ததோடு சுகாதார நடைமுறைகளை பேணி நடக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :