ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி!

லங்கை இனவாத அரசின் முஸ்லிம் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது' - இந்திய சமூக ஜனநாயகக் கட்சி! SDPI - Social Democratic Party of India
இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கோடு செயல்பட்டு வருகிறது.

இனவாத இலங்கை அரசு முதலில் ஈழத்தமிழர்களை குறிவைத்து வேட்டையாடியது. இப்போது முஸ்லிம்களை குறிவைத்து, தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

சிறுபான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும்
பெரும்பான்மை சிங்கள இனவெறிதான், தனது நோக்கம் என்பதனை இலங்கை அரசு நிரூபித்து வருகிறது.

இதன் தொடர்ச்சிதான் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களுக்கு தடை விதிப்பது, முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பது, முஸ்லிம் தலைவர்களை கைது செய்வது என்ற இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள்.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசு தனது இனவாத, சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

K.K.S.M. Dhehlan Baqavi (SDPI)
தெஹ்லான் பாகவி
தேசிய துணைத்தலைவர்
SDPI கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :