இலங்கை உட்பட மேலும் சில நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத்தடை விதித்துள்ளது.
இதன்படி இலங்கை இந்தியா பாகிஸ்தான் இந்தோனேஷியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத்தடை விதித்துள்ளதாக சவுதி அரேபிய விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய நாடுகளுக்கு பயணித்துள்ள சவுதி அரேபிய பிரஜைகள் மீண்டு நாடுதிரும்புவதற்கு 72 மணித்தியால காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக முன்னதாக கனடா ஓமான் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஆசிய நாடுகள் சிலவற்றுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ReplyForward
0 comments :
Post a Comment