ரமலான் மாத சிறப்பு வழிபாட்டிற்கு தடை! தமிழக அரசின் அறிவிப்பை திரும்ப பெற பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!



கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை என்பதை காரணம் காட்டி, ஏப்ரல் 26 முதல் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ரமலான் மாதத்தில் இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்தி வந்த தமிழக முஸ்லிம்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் ரமலான் மாத சிறப்பு வழிபாட்டிற்கு தடையாக இருக்கும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழக அரசு கடந்த 20ந் தேதி புதிய கட்டுபாடுகளை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசின் அனைத்து அறிவிப்பிற்கும் தமிழக முஸ்லிம்கள் முழுமையாக கட்டுப்பட்டு வருகின்றனர்,

குறிப்பாக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நடத்தப்படுகின்ற இரவு தொழுகையின் நேரத்தை குறைத்து இரவு 10 மணிக்குள் தொழுகையை நடத்துகின்றனர். மேலும் பள்ளிவாசல்களுக்குள் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியுடன் நின்று வழிபட வேண்டும், பள்ளிவாசல்களுக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை என முழுமையான கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களின் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

இச்சூழலில் கொரோனா கட்டுப்பாடு என கூறி வழிபாட்டுதலங்களில் பொதுமக்களின் வழிபாட்டிற்கான அனுமதியை தமிழக அரசு முழுமையாக மறுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. குறிப்பாக ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு புனித மாதம் என்பதால் இம்மாதத்திற்கென சிறப்பு வழிபாடுகள் இருக்கின்றது. கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அந்த வழிபாடுகளில் ஈடுபட இயலாமல் போயிருந்த நிலையில், இந்த வருடமும் அதே நிலை ஏற்படுத்துவது வருத்தமளிக்கின்றது.

எனவே, முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். மேலும் தொழுகைக்கு வருபவர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்ட காய்ச்சல் பரிசோதனை, தனி மனித இடைவெளியை கடைபிடித்தல்
போன்ற வழிகாட்டுதலுடன் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :