சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்



சம்மாந்துறை நிருபர் - ஐ.எல்.எம் நாஸிம்-
நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (28) ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது “அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”, “பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி, மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள், பிள்ளைகள் பட்டினினையை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு நலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவை குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, கத்தரித்த ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :