இலங்கை திரு நாட்டின் 73வது சுதந்திரதினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் சம்மாந்துறை பிராந்திய தன்னார்வத்தொண்டர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு (4) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.ஆசாத் அவர்கள் வைத்தியசாலை உயர் அதிகாரிகள் ,ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் அம்பாரை மாவட்ட முகாமையாரும் ,மாவட்ட இணைப்பாளர் மற்றும் பொது மக்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment