தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு


பாறுக் ஷிஹான்-

மிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று(26)இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 22 இல் இருந்து குறைவடைந்து 16 ஆகி இன்று 10 வரை குறைவடைய காரணம் இணக்க அரசியலை மேற்கொண்டமையாகும்.கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் உங்களை (முஜடலீம்கள்) நம்பி ஏமாந்தது போதும்.எமது முதுகில் ஏறி சவாரி செய்வதை நிறுத்துங்கள்.இனியும் ஏமாற நாம் தயார் இல்லை.சிங்களம் முஸ்லீம் மக்களுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம்.

எமது உரிமைகளை சலுகைகளாக கேட்பதை நிறுத்துங்கள்.29 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட 40 ஆயிரம் தமிழ் மக்கள் பல வருடங்களாக அரசியலுக்கு அப்பால் அதிகாரிகளை நம்பி ஏமாறியுள்ளனர்.ஆகையினால் எம்முடன் இணைந்து வாழ விரும்பினால் விட்டுக்கொடுக்க வேண்டும்.தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க கூடாது.சட்டம் நீதி என்பது ஒன்றாக இருக்க வேண்டும்.ஆனால் தற்போது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்காகவே முஸ்லீம் அரசியல் வாதிகள் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :