அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை தவறான நடைமுறை-ரவூப் ஹக்கீம்



கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்களை காரணங்களை தெரிவிக்காது உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை தவறான நடைமுறையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (3) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
இது மிகவும் துரதிர்ஷ்டமானது இதனால் நாங்கள் எல்லோரும் பெரிதும் ஏமாற்றமடைந்திருக்கின்றோம். இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சட்டபூர்வமான நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட வழக்காளிகள் பெரிதும் கவலையடைந்துள்ளோம்.
இதே போன்றுதான், அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களும் கூட, உயர் நீதிமன்றத்தில் பத்து நாட்களாக விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் உரிய காரணங்கள் காட்டப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
இரண்டு, மூன்று நாட்களாக விசாரிக்கப்படும் வழக்குகளின் இறுதியில் அவற்றை காரணங்கள் இன்றி நிராகரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :