பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை



தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

செய்யது இப்ராஹிம் கனி-
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை நடத்தியதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் காஜா மொய்னுதீன் பாகவி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது மன்சூர் காசிமி, பஷீர் அஹமது ஆகியோர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது .
அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக மாறி அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகளை நடத்தியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும் .
மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள கிளர்ந்தெழுந்து நெருக்கடிகளை அளிக்கும் போது மக்களின் கவனத்தைத் திருப்ப மத்திய அரசு சிபிஐ , அமலாக்கத்துறை போன்ற தனது அமைப்புகளைப் பயன்படுத்துகின்றது . இந்த வகையில் தங்கள் வாழ்வுரிமைக்காக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் சூழலில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை இச்சோதனையை நடத்தியுள்ளது . இதன் மூலம் மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு மத்திய அரசு முனைந்துள்ளது . இவ்வாறு ஆளும் அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை மாறியிருப்பது இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது .
தன்னெழுச்சியாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கும் முஸ்லீம் அமைப்புகளே பின்னணியில் உள்ளன என்றும் கூட மத்திய பாஜக அரசு பிரச்சினையை திசை திருப்பக் கூடும் . சட்டத்திற்குட்பட்டு மக்களின் உரிமைகளுக்குக்காகக் குரல் கொடுத்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் மீது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு இந்த சோதனைகளை நடத்தியுள்ளது . இந்த அராஜகத்தைக் கூட்டமைப்பு கண்டிப்பதுடன் , மத்திய அரசு தனது அராஜக போக்கைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :