கொரோனாவிலும் மனிதாபிமான மதங்கடந்தசேவை மகத்தானது! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் புகழாரம்.

வி.ரி.சகாதேவராஜா-

கொரோனாக் காலகட்டத்திலும் இனமதபேதம் கடந்த மனிதாபிமான சேவையானது உண்மையில் பாராட்டுதற்குரியது.எமது இந்துமாமன்றம் இவ்வாறு பௌத்தமாணவர்கள் மக்களுக்கு உதவுவது வரலாற்றுநிகழ்வாகும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அம்பாறை மாவட்டசெயலக வளாகத்தில் இடம்பெற்ற உதவிவழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் புகழாரம் சூட்டினார்.

மாவட்ட செயலக இந்து மாமன்றம் இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையோடு அம்பாறையைச்சேர்ந்த தஹம் அறநெறி மாணவர்களுக்கும் நலிவடைந்த பௌத்தமக்களுக்கும் ஒருதொகுதி அப்பியாசக்கொப்பிகள் உலருணவுப்பொதிகளை கையளிக்கும் வைபவம் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நேற்று கச்சேரி வளாகத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் இந்துக்குருமார்;கள் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் கல்முனைவடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட இந்து பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
மதங்கடந்தசேவை ஒருபோதும் பிரிவினையை வளர்க்காது. மாறாக சகவாழ்வை சௌயன்யத்தை ஏற்படுத்தும்.

சிவனொளிபாதமலை கதிர்காமம் தலதாமாளிகை உகந்தை போன்ற புராதன வணக்கஸ்தலங்களுக்கு நாம் இனமதமொழி பேதங்கடந்து சென்று தரிசித்து வணங்கிவருகிறோம்.

அவ்வாறு தீகவாபியில் 1800வருடங்களுக்கு முன்பு நிருமாணிக்கப்பட்ட புராதன மகாவிகாரையிலிருந்து பெற்ற புனிதசின்னங்களை இன்று நாம் அனைவரும் தரிசித்து மதிப்பளித்துக்கௌரவிக்கின்றோம். தானம் செய்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம்.

அப்படி சகல இனமக்களும் இணைந்து செயற்படும்போது நாட்டில் இயல்பாகவே சமாதானம் இனசௌயன்யம் நிலவும். மதத்தால் இனத்தால் மொழியால் வேறுபட்டாலும் எமது இரத்தம் சிவப்புநிறம்தான். அதை மாற்றமுடியாது.எனவே மனிதாபிமானரீதியில் செயற்பட்டு மனிதர்களாக வாழ்வோம். என்றார்.

இந்து கலாசார மாவட்ட உத்தியோகத்தர்களான கு.ஜெயராஜி வி.பிரதாப் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :