பிரதேசசெயலக முடக்கல்களை கிராமசேவைபிரிவுரீதியில் அமுலாக்க ஆலோசனை. அம்பாறை மாவட்ட கொரோனா வழிநடாத்தல் குழுவில் முன்வைப்பு..



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுக்கொத்தணி உருவாக்கத்தின் பின்பு பிரதேசசெயகரீதியாக ஏற்படுத்தப்பட்ட முடக்கல்களை சுகாதார ஆலோசனையின் பிரகாரம் கிராமசேவைப்பிரிவு ரீதியில் மாற்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கொரோனா வழிநடாத்தல் குழுவின் விசேட கூட்டம் நேற்றுமாலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையி;ல் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றபோது பிரஸ்தாபிக்கப்பட்டது.

கூட்டத்தில் மேலதிகஅரச அதிபர் வே.ஜெகதீசன் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் குண.சுகுணன் பொலிஸ் அதிகாரி இராணுவ 24 ஆம் படைப்பிரிவு கட்டளைத்தளபதி முடக்கப்பட்ட பிரதேசங்களின் பிரதேசசெயலாளர்கள் சுகாதாரவைத்தியஅதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அங்கு கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட விடயங்களாவன:
அக்கரைப்பற்று பிரதேசம் போன்று பொத்துவில் உல்லைப்பகுதியும் முடக்கப்பட்டுள்ளது. மக்களைக்காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இவை இடம்பெறுகின்றன.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொடர்ந்து இறுக்கமான போக்குவரத்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். தொற்றாளர்கள் கூடுதாக உள்ள கிராமசேவைப்பிரிவுகளி;ல் கூடுதல் கவனமெடுக்கவேண்டும்.

நடமாடும் உணவுப்பொருட்களுக்கு மாத்திரம் அனுமதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள பிரதான சந்தைகள் யாவும் மட்டுப்படுத்தப்பட்டு வீதியோரங்களுக்கு ஜதாக்கப்படவேண்டும்.
மக்கள் அத்தியாவசியம் என்றால் மட்டும் கட்டுப்பாட்டுக்குமத்தியில் வீட்டைவிட்டு வெளியேறவேண்டுமே தவிர அநாவசியமான பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும். அதேவேளை வீண் அச்சங்களை ஏற்படுத்த முனையக்கூடாது.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுவிநியோகம் சீராக இடம்பெற்றுவருவது சுட்டிக்காட்டப்பட்டது. முடக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 20ஆயிரம் குடும்பங்களுக்கு 240 மில்லியன்ருபா பெறுமதியான உருணவுப்பொருட்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :