முன்னாள் அமைச்சர் ஏ. ஆர் மன்சூரின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்க முத்திரை வெளியிட பரிந்துரை

எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜெஸ்மின்-

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர் மன்சூர் அவர்களின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை வெளியிட பரிந்துரை

கல்முனை மாநகரின் சிற்பி , கரை படியாத கரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் சேவையை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை வெளியிடக்கோரி அன்னாரின் கனிஷ்ட புதல்வியான சட்டத்தரண மர்யம் நளிமுதீன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் இனால் அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 14 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மாவட்ட அமைச்சராகவும் , வர்த்தக வாணிப மற்றும் கப்பற்துறை அமைச்சராகவும் , கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுன்சிலின் உயர்பீட அங்கத்தவராகவும் ,குவைத் நாட்டின் தூதுவராகவும், தன் தூய்மையான சேவைகளாலும் அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் பதவிகளை அலங்கரித்து சிறுபான்மை அரசியல் தலைவர்களின் முன்மாதிரியும் முதன்மையானவராகவும் திகழ்ந்தது அரசியலிலிருந்து கௌரவமாக ஓய்வுபெற்ற அன்னாருக்கே அஞ்சல் திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரையை வெளியிடுமாறு கோரியே ஏ. ஆர் பவுண்டேசனின் செயலாளர் மிப“ராஸ் மன்சூரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .

மேலும் பெரும்பாலான அரசியல்வாதிகளைப்போல் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டு வந்தவர். 

சமூகப் பொறுப்புகள் நிறைந்த சமூக நெருக்கடிக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களை கொண்டு செயல்படுத்திக் காட்டியவர் இவரின் காலகட்டத்தில் சமூகங்களுக்கிடையே அங்காங்கே பற்றிக் கொண்ட இனவாத தீப்பொறிகளுக்கு இன உணர்ச்சி என்ற எண்ணை அண்ழக் கொள்ளாத வகையில் அதனை அணைத்துவிட அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவருக்கே உரித்தான ஆளுமை என்றால் அது மிகையாகாது.

 அத்துடன் 1980களில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொண்டு உலகமெல்லாம் வாழும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார் .

உலக நாடுகளில் நடைபெற்ற மகா நாடுகளிலும் சர்வதேச பாராளுமன்ற சம்மேளனக் கூட்டங்களிலும் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொண்டு எமது நாட்டுக்கும் மக்களுக்கும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :