பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் குடும்ப வன்முறையால் கொலை!

சுவிஸ் நிஸாந்தி பிரபாகர்-

பிரான்சில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் குடும்ப வன்முறையால்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒரே குடும்பத்தை  சேர்ந்த இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். 

பிரான்சில் Noisy-le-Sec என்ற நகரில் சனிக்கிழமை( 03.10.2020 ) ஒரே குடும்ப நபர்கள் 5 பேர் கொல்லப்பட்ட வன்முறை சம்பவத்துக்கு குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகம் கூறி இருக்கின்றது. 

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் அமைந்துள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த தமிழ் குழந்தை ஒருவர் அங்கிருந்தவர்களிடம் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.

"எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெட்டியும் அடித்தும் கொலை செய்துவிட்டார்! பலர் உயிருக்காக போராடுகின்றனர் என குறித்த குழந்தை மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான்

நிர்வாகியும் காவல்துறைக்கு அறிவிக்க சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர் சம்பவம் நடந்தவீட்டை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க கத்தியால் வெட்டியும் சுத்தியலால் அடித்தும் பயங்கரமாக கொலை செய்யப்பட்ட நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டனர். ( ஒரு கைக்குழந்தை, 4 வயது குழந்தை ஒன்று, இரண்டு 13 வயது சிறுவர்கள், ஒரு பெண் ( தாக்குதல் நடத்தியவரின் மனைவி).

மேலும் அவ்விடத்தில் படு காயமுற்ற நிலையில் ஐந்து பேர் நினைவற்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர்.அவர்கள்
மேலதிக மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!" . என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் தன்னை தானே தாக்கியதில் சம்பவ இடத்தில் நினைவை இழந்து 'கோமா' நிலையில் இருந்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பபட்டதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார். 

பிரான்சில் இப்படி ஒரு குடும்ப பயங்கரத்தை இதுவரை பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். "சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர்அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தை பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு நபரால் நடத்தப்பட்டதாக நம்பமுடியவில்லை என்றும், விசாரனை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக படுகாயமடைந்த சிறுவனால் குற்றம் சாட்டப்பட்ட அவரின் மாமா கோமாவில் இருந்து மீண்டால் மட்டுமே 100% உண்மையான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

இலங்கை யாழ்சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தங்கை குடும்பமே இந்த தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இருகுடும்பமும் france காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று கைக்குழந்தையை இந்து முறைப்படி வித்துவாங்கும்
சடங்கு செய்து இருக்கின்றார்கள்.

அண்ணன், தங்கை எனும் இவ்விரு குடும்பங்களும் மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இதுவரை ஒரு சிறிய தகராறையோ சத்தத்தையோ தாம் கண்டதில்லை எனவும் மிகச்சிறப்பாக வாழ்ந்துவந்ததாகவும் அருகில் வசிப்பவர்களும் கடைக்காரர்களும் கூறிஉள்ளனர்...

"அவர்கள் ஒரு சாதாரண, முன்மாதிரியான குடும்பம். என்னால் இதை நம்ப முடியவில்லை" என்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முன்னர் கற்பித்த உள்ளூர் மேயரான ஆலிவர் சர்ராபெய்ரூஸ் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :