மோஜோவும் இளம் ஊடகவியலாளர்களும்..





 அப்ரா அன்ஸார்-
லங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான மீடியா கோர்ப்ஸ் நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீதுவை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் றமதாவில் செப்டம்பர் 11 தொடக்கம் 16 வரை இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து 25 இளம் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அதில் 12 சிங்கள ,6 தமிழ் மற்றும் 7 முஸ்லிம் ஊடகவியலாளர்களில் 18 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்கியிருந்தனர்.பல்வகைத்தன்மை மற்றும் இணைய ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர்.இளம் ஊடகவியலாளர்கள் முன்னதாக நான்கு இணையவழிக் கருத்தரங்குத் தொடர்களில் பங்குபற்றிருந்தனர்.இக் கருத்தரங்குத் தொடர்கள் பல்வகைத் தன்மை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றின் மீதான கூருணர்திறன் ,முரண்பாடு உணர்திறன் கொண்ட ஊடகவியல், பால்நிலை உணர்திறன் கொண்ட ஊடகவியல் மற்றும் ஊடகவியலுக்கான சமூக ஊடகம் என்ற கருப்பொருட்களில் நடாத்தப்பட்டன.
இப் பயிற்சித் திட்டத்திற்கு முன்னதாக நடாத்தப்பட்ட இணையவழிக் கருத்தரங்குகள் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வாண்மையாளர் வரிசை ஒன்றினால் நடத்தப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்.அண்மையில் சீதுவை நகரில் இளம் ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கலந்து கொண்ட பயிற்சி நிகழ்ச்சி்த் திட்டம் SDJF அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் திரு.முஹமட் அஸாட் அவர்களின் தலைமையில் சிறிய அங்குரார்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய திரு.முஹம்மத் அஸாட் "மீடியாகோர்ப்ஸ் "நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் முதன்மையானவர்களையே நாம் இந் நிகழ்ச்சித் திட்டத்துக்காக தெரிவு செய்தோம் ,நீங்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் கதை சொல்பவர்கள் என்ற வகிபாகத்தின் ஊடாக இலங்கையின் சமாதானம் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதற்கு தலைமையேற்கும் சக்திகளில் ஒன்றாக செயற்படுவீர்கள் என நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.
அங்குரார்ப்பன நிகழ்வின் போது ஒவ்வொரு பின்தொடரல் நிலை மாணவரும் ஸ்மார்ட்போன் (கையடக்கத் தொலைபேசி) உள்ளடங்கிய தொலைபேசி ஊடகவியல்Mobile journalism ("மோஜோ" ) கருவித்தொகுதி ஒன்றைப் பெற்றுக் கொண்டனர்.நடைமுறை கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் அம்சங்களில் பிரதான கவனம் கொண்டதாக அமைந்திருந்த இப் பயிற்சி நிகழ்வு பயிற்றுனர்கள் திரு.கபில ராமநாயக்க மற்றும் திரு.முஹம்மது அஸ்வர் ஆகிய பயிற்றுனர்களுடன் SDJF அமைப்பின் பணியாளரான திரு.ருவான் போகமுவ ஆகியோரால் நடத்தப்பட்டது.

முதலாம் நாள் மற்றும் இரண்டாவது நாள் கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் (மோஜாே) என்ற அம்சத்தில் பிரதான விடயமான Basic camera shots,camera angles, camera moments தலைப்பில் விரிவுரை இடம்பெற்றது.
தமிழ்மொழி மாணவர்களுக்கு திரு.முஹம்மது அஸ்வர் மற்றும் சிங்கள மொழி மாணவர்களுக்கு திரு.கபில ரமணாயக்க விரிவுரைகளை நிகழ்த்தினர்.அத்தோடு Tools for smartphone யை எவ்வாறு பொருத்துவது சம்பந்தமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மாணவர்களை இரு குழுவாக பிரித்து அவர்களிற்கு சுயமாக கருவிகளை பொருத்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.

பின்னர் kinemaster செயலியினை பயன்படுத்தி எவ்வாறு காணொலி ஒன்றை எடிட் செய்வது சம்பந்தமாகவும் , kinemaster செயலியை எவ்வாறு செயற்படுத்துவது முதலான பயிற்சிகள் வழங்கப்பட்டது.ஹோட்டல் ரமதாவில் உள்ள ஏதாவது ஒரு நிகழ்வை கருப்பொருளாக வைத்து கதை ஒன்றை உருவாக்குமாறு விரிவுரையாளர் எங்களை பணித்தார்.அதற்கிணங்க அனைவரும் வெவ்வேறு கதைப்பொருளில் கதைகளை உருவாக்கினோம் அவை திரையில் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரும் பார்வையிட்டோம்.

களவிஜயத்திற்கு செல்வதற்கு முன்னர் களவிஜயத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இடமான நீர்கொழும்பு, மோரவல பிரதேசம் எவ்வாறான சூழ்நிலையை கொண்டது ,அங்கு சென்று எவ்வாறு பிரச்சினை ஒன்றை இணங்காண்பது மற்றும் கட்டுரை வடிவில் எழுதுவது எவ்வாறு என டி.எம்.ஜி சந்ரசேகர (specialist communication ICTA) அவரினால் விரிவுரை நடாத்தப்பட்டது.அத்தோடு கையடக்கத் தொலைபேசிக் கதைகளை உருவாக்குவதற்கு அவசியமான ஊடகவியல் திறன்களையும் அதிக அளவில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தது.களவிஜயத்திற்கான முன்னைய நாள் எமது விரிவுரையாளர் திரு முஹம்மது அஸ்வரினால் நிகழ்த்தப்பட்டது.

நான்காவது நாளில் நாங்கள் அனைவரும் களவிஜயத்திற்காக அதிகாலை 5.30 ற்கு நீர்கொழும்பு மோரவலை பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டோம்.மூன்று அணியாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு அணியிற்கும் ஒவ்வொரு பயிற்சியாளர்கள் தலைமை தாங்கினர்.அக்கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகத்தின் அவலநிலை மற்றும் நீர்கொழும்புக் கடற்கரையை பாதிக்கும் சூழல் பிரச்சினைகள் பற்றி கதைகளின் தேடலில் இளம் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.

காணொலிப் பதிவுகளை மேற்கொள்ளல், நேர்காணல் எடுத்தல், கதை வசனம் எழுதுதல் போன்ற விடயங்களை மேற்கொண்டனர்.கள விஜயத்தை பூர்த்தி செய்தி விட்டு திரும்பிய இளம் ஊடகவியலாளர்கள் அனைவரும் தத்தம் கள ஆலோசகர்களின் ஆதரவு மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட 25 கையடக்கத் தொலைபேசிக் கதைகளை மட்டறுத்து பூர்த்தி செய்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிக் கதைகள் அவற்றின் ஊடகவியல் நியமங்கள் மற்றும் காட்சித் தரம் என்பவற்றை காணொலிகளின் காட்சி அலகுகளை ஒன்றன் பின் ஒன்றாக மதிப்பிடும் வரையறைக்கு ஏற்ப கள ஆலோசகர்கள் மற்றும் இணை நிலையினரால் மதிப்பீடு செய்யப்பட்டன.இந்த மீளாய்வின் அடிப்படையில் அருளானந்தம் டேவிட், கோசல குணவர்தன, மற்றும் நகுலேஸ்வரன் புவிகரன் ஆகியவர்கள் மீடியாகோர்ப்ஸ் பின்தொடரல் நிலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த மூன்று கையடக்கத் தொலைபேசிக் கதைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய பின் தொடரல் நிலை மாணவர்கள் தமது முதலாவது கையடக்கத் தொலைபேசிக் கதையை உருவாக்கியமைக்காக பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.இறுதி நாள் அடிப்படைத் தரவு ஊடகவியல் சம்பந்தமான விரிவுரை திரு.ஷிஹார் அனீஸினால் நடாத்தப்பட்டது.

பாடப்பரப்பிற்கு அப்பால் வேறுபட்ட இனம், மதம்,மொழி சுமந்தவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.ஒரு இனத்தை சேர்ந்தவர்களுடைய மொழி,பண்பாடு ,கலாசாரம் என்பன இலங்கை நாட்டை பொருத்த வரையில் இன்னொரு சமூகத்திற்கு தெரியாமல் இருக்கின்றது.எனவே இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதும் ,புரிந்துணர்வும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.அவ்வாறான சூழ்நிலைக்கு மாற்றமாக அன்னிய சமூகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற வேட்கையும் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது அதற்காக எதிர்வரும் காலங்களில் கள விஜயத்தினை இனம் ,மொழி கலந்து மேற்கொள்ளவே நாம் தயாராக இருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான விடயமாகும்.அத்தோடு இனம் ,மதம், மொழி கடந்து அனைவரும் ஒன்றாக விருந்தோம்பல் ,புகைப்படம் பிடித்தல் முதலான நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டோம்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்தே அனைவரும் விரிவுரையில் கலந்து சிறப்பித்தோம்.மீடியா கோர்ப்ஸ் பின்தொடரல் மாணவர் நிலை நிகழ்ச்சித்திட்டமானது ஜனநாயக இலங்கைக்கான ஊடகவலுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ,ஆய்வு மற்றும் பரிமாற்றங்களுக்கான சர்வதேச சபை (IREX) மற்றும் USAID நிறுவனம் என்பவை இணைந்து இந் நிகழ்ச்சித் திட்டம் மூன்று வருடங்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த பின்தொடரல் மாணவர் நிலை நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரையில் ஆறு தொகுதியாக 133 இளம் ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்டுள்ளனர்.இவ்வூடகவியலாளர்கள் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட சுவாரஷியமிக்க கையடக்கத் தொலைபேசி மற்றும் பல ஊடகக் கதைகளைத் தயாரித்துள்ளனர்.
SDJF அமைப்பு எதிர்காலத்திலும் இதையொத்த நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.எனவே இந் நிகழ்வில் ஏனைய ஊடகவியலாளர்களும் கலந்து பயிற்சி பெற்று பூரணத்துவம்மிக்கவர்களாக வெளிவர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்.அத்தோடு ஏற்பாட்டுக் குழுவின் திட்டமிடலே இப் பயிற்சித் திட்டத்தின் வெற்றிக்கு பிரதானமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :