அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் பயணித்த வாகனம் சுமார் 75 பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்,
தலவாகலை டயகம பிரதான வீதியின் மன்ராசி பகுதியிலே( 05 ) இரவு 10 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
பிரதேசசபை தலைவர் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போதே சாரதியின் கட்டுப்பாட்டை மீறீ பள்ளத்தில் பாய்ந்துள்ளது ,
விபத்துக்குள்ளான பிரதேசசபைக்கு சொந்தமான ஜீப் ரக வாகனமானது கடும் சேதமாகியுள்ளதுடன் சபைத்தலைவர் கதிர்ச்செல்வன் மற்றும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் ,
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,
0 comments :
Post a Comment