இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்..!

பி
ரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜோ பிடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கணினி வழி பண பரிவர்த்தனை (பிட்காயின்) கும்பலின் கைவரிசை என கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். முடக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

கணக்கை முடக்கியுள்ள ஹேக்கர்கள், பிரதமரின் கரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர் நிறுவனம், வெரிஃபைடு பக்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜான் விக் என்பர் ஹேக் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :