ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் இலங்கை தூதரகம் அந்நாட்டு பொலிஸாரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment