நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த அதேவேளை, அவர் இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றதிலேயே அதிக விருப்பு வாக்குகளை பெற்றார்.
இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த முறை தேர்தலின் ஊடாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகள் கிடைத்திருந்தன.
மஹிந்த ராஜபக்ஷ நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
2004ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர் 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் பிரதமராக பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில், இந்த முறை நான்காவது தடவையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் தேதி கண்டியில் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment