முன்னாள் பா.உறுப்பினர் அட்டாளைச்சேனை நசீர் அவர்களுக்கோர் கடிதம்..

மு
கநூல் வழியாக அனுப்பப்பட்டிருந்த கடிதம் இம்போட்மிரர் இணையத்தினூடாக பகிர்ந்து கொள்கிறோம்.

1. முதலில் தாங்கள் இந்தக் கட்சிக்கு எப்போது இணைந்துள்ளீர்கள் எப்போது யாரால் தங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது (அடுக்கடுக்காக சேர்மன், மாகாண உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பின்) இவ்வளவும் உங்களுக்கு கிடைத்தது தங்களின் படித்து பட்டம் பெற்றதாலையோ அல்லது திறமையினாலையோ இல்லையென்பதை சாட்சியமாக வைத்து இவைகள் அனைத்தும் வாஹிட் மாஸ்டர், றசீட் லோயர், கபூர் லோயர், பழீல் பிஏ, இன்னும் பல படித்த மேதைகள் இருக்கத்தக்கதாக உங்களுக்கு கிடைக்கப்பெற்றதானது ஊரை மைய்யப்படுத்தியும் கட்சி மற்றும் அதன் தலமையின் சிபாரிசும் காரணம் என்பது ஒருபக்கம் இருக்க இதே நிலமை நீங்கள் வேறு எந்தக்கட்சியில் இருந்தாலும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை மு.காவால் மாத்திரமே முடியும் என்பதனை முதலில் நீங்கள் விளங்க வேண்டும்.

2. தங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும் கடந்த மாகாண அமைச்சர் தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர் காலம் தொட்டு எத்தனை தொழில்கள் வழங்கியுள்ளீர்கள் யாருக்கெல்லாம் .... ?எந்த இனத்தினருக்கு எவ்வாறு......? அரசியலில் இதைல்லாம் சகஜம்தான் ஆனால் அதிலும் நீங்கள் பார்த்த சில வேலைகளை ஊர்மக்கள் அறியாமல் இல்லை உதாரணம் பல ஆதாரங்கள் உள்ளது எல்லாமே அறிந்த மத்திய குழுவினர் பலமுறை தங்களுக்கு அறியத்தந்தும் கவனத்தில் எடுக்காமை அத்தோடு ஊரில் பலபேரிடம் தொழில் தருவதாக ஏமாற்றியமை, இன்னும் பல உண்டு வேணாம் ஆனால

இப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்ததை மறந்து இன்று ஆத்திரத்தில் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக வந்த சரிந்தரமே இல்லாத போதும் அல்லாஹ்வை மறந்து பேஸ்புக் லைப் போட்டு உலகம் அறிய தலைவரும் உதுமாலெப்பையும்தான் தோல்விக்கு காரணம் என்று சொல்லுவதற்கு எப்படி உங்கள் மனம் இடம் கொடுத்தது.

3. பாலமுனை ஒலுவில் இன்று நேற்றல்ல எப்போதும் அவர்களின் மனதில் அந்த ஊர்கள் வேறு ஊராகவே நினைக்கிறார்கள் நமது பிரதேசம்தான் என்பதை மனதில் கொள்ள உங்களின் கடந்தகால செயற்பாடும் அபிவிருத்தியும் போதாததுதான் அதற்கு காரணம். எப்போதும் அந்த ஊர்களை மற்றைய வேட்பாளர்களை காசு கொடுத்து வாங்கி பழக்கிவிட்டார்கள் அதுதான் இம்முறையும் நடந்துள்ளது. 

4. உங்கள் தோல்விக்கு பல காரணங்களை அடுக்கிக்கோண்டே போகலாம் அதனை வெளிப்படையாக சொல்லி நமது பல்லை குத்தி மோர வேண்டிய தேவையில்லை அது உங்கள் மனசாட்சி சொல்லும் மீட்டிப்பாருங்கள்.

5. அட்டாளைச்சேனையில் யாரும் சொல்லி உங்கள் இலக்கத்திற்கு போடாமல் விடவில்லை ஊரில் உள்ள பல மு.கா. ஆதரவாளர்களுக்கு உங்களின் சுய செயற்பாடுகள் பிடிக்கவில்லை அதன் தாக்கம்தான் உங்கள் இலக்கத்தை தவிர்த்து கட்சிக்கும் வேறு நம்பர்களுக்கும் இட்டுள்ளார்கள்.

6. நீங்கள் சொல்லும் ஊரிலுள்ள சில தரகர்கள் உதாரணம்- றியா, உவைஸ், ஜெளபர், பதாஹ் மாஸ்டர், ஹமீட், றிஸ்வி இன்னும் பலர் இதில் யாராவது இலக்கம் 4 ற்கு போட வேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லை உங்களுடைய இலக்கத்தோடு சேர்த்து நீங்கள் சொன்ன கூட்டை விட்டுவிட்டு அவர்களின் ஆதரவு நம்பருக்கும்தான் போடச்சோன்னார்கள் அப்படி உங்களுடைய நம்பருக்கு போட வேண்டாம் என யாராவது சொன்னால் அதற்குரிய உரிய ஆதாராத்தை பகிரங்கமாக காட்டவும். அது பொய்யான தகவல்.

7.நீங்கள் நம்பியவர்களாக உங்களுக்கு ஆலோசனை கூறுபவர்களாக உங்களுக்கு உதவிகள் செய்பவர்களாக ஓரத்தில் உங்கள் அருகில் உங்களை அடுத்தவர்கள் அண்டக்கூடாது என்றிருந்தவர்கள் சிலர் காலையில் உங்களுடனும் மாலையில் அடுத்த பக்கத்தூர் வேட்பாளருடனும் போய் இருந்து உங்களைப் பற்றி அள்ளிவைத்து உங்களிடம் நடித்துக் கொண்டிருந்ததை நீங்கள் அறியாமல் இருந்தமை கவலையான விடயம்தான்.

8.நீங்கள் யாரை அருகில் வைக்க வேண்டும் யாரை தூரத்தில் வைக்க வேண்டும் என்று தெரியாமல் உங்களை ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் சிலர் இரவு பகலாக பணத்துக்கு மட்டும் பணியாற்றியதை நாம் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.

9.அடுத்த ஊர்கள் மனாப்பை விடயத்தில் அமைதியாக இருக்கத்தக்க யாரின் சொல்லையோ கேட்டு அடுத்த வேட்பாளரின் பணத்தை பெற்றுக்கொண்டு வந்த ஒருவரின் அஜந்தாவில் மேடையில் அறிவிக்கப்பட்ட மனாப்பை விடயத்தை நீங்கள் கண்டிக்காமல் ஏற்றுக்கொண்டது நியாயமற்ற விடயம்.

10.சுமார் 15 வருடத்தின் பின்னர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை 3 இலக்கத்திற்கு மாத்திரம் வாக்களித்து பழகிய போராளிகளுக்கு இப்படியான மனாப்ப வெட்டு குத்து தேர்தல் நடந்துள்ளமையானதால் அதன் அனுபவம் உங்களுக்கு இல்லாததால் ஒரு மாத்திற்கு முதல் இருந்தே பொத்துவில் வாசித்துடன் ஏற்படுத்திய உடன்படிக்கையினால் மற்றைய ஊர்களில் உங்களுக்கு வாக்களிக்கவிருந்த போராளிகள் அவர்களது ஊருக்கு வேட்டு விழும் என்பதனால் வாக்கை வேறு திசைக்கு மாற்றிவிட்டார்கள். அப்படியான உடன்படிக்கைகளை இறுதி ஓரு வாரத்தினுள் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

11. மூடிய அறைக்குள் பேச வேண்டிய விடயத்தை பேஸ்புக் லைப் போட்டு உலகறிய குற்றம் சாட்டும் போது கூடவிருந்து வாஹித் மாஸ்டர் கபூர் லோயர் இன்னும் பலரின் முதிர்ச்சியும் சீரோவாக மாறிவிட்டது ஆனால் ஹாரீத் ஆசிரியரை பாராட்ட வேண்டும்.

12. இனியும் கூட இருந்து குழிபறிக்கும் போட்டுக்கொடுத்து இலபாம் பெற்று நம்பிக்கையானோரை மூட்டி விடும் மூடர்களை இனம்கண்டு தூரவைத்து அடுத்த அரசியலை ஆரம்பித்தல் உங்களுக்கும் ஏனைய அனைவருக்கும் அழகாக அமையும் என்பதனை கூறிவைப்பதில் ஒரு சந்தோசம்.\


இப்படி தமக்குள்ளே ஆயிரத்திற்கும் மேல பிழைகளை வைத்திக்கொண்டு எனது தோல்விக்கு காரணம் இந்த இரண்டு பேர்தான் என கூறுவதை சற்று பரசீலனை செய்யவும்.

உதுமாலெப்பை நினைத்திருந்தால் கடந்த தேர்தல் காலத்தில் அக்கரைப்பற்றிலிருந்து வந்த அழைப்பிற்கு ஆட்சியில் அதா இருப்பார் என்று தெரிந்தும் அவரின் கட்சிக்கு மீழ் இணைய மறுத்தமையானது யாருக்கும் குறிப்பாக உங்களுக்கும் தலைவருக்கும் கட்சிக்கும் துரோகமிழைக்கக் கூடாது என்பதுதான் காரணம் அதுதான் அவரின் விசுவாசம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :