அக்கரைபற்று திருகோணமலை பஸ்ஸுக்கு கல் எறியப்பட்டதால் சாரதி காயப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று காலை 6.10 அளவில் வாழைச்சேனை வட்டவானில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 3மணிக்கு திருகோணமலையிலிருந்து அக்கரைபற்று நோக்கி பயணித்த இ.போ.ச.பஸ் வண்டிக்கே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குற்பட்ட வட்டவான் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் காரணமாக சாரதி காயப்பட்டதால், பயணிகள் இறக்கப்பட்டு, பஸ் பயணம் இடைநிறுத்தப்பட்டது.
இந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணை தொடர்கிறது.
0 comments :
Post a Comment