அதாஉல்லாவின் வெற்றியை கொண்டாட வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள் !

நூருல் ஹுதா உமர்-


தேசிய காங்கிரசின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு 38911 வாக்குகளை பெற்றதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இழந்த தேசிய காங்கிரசின் ஆசனம் இம்முறை மீண்டும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு கிடைக்கப்பெற்றது எனும் சந்தோசத்தை கொண்டாடும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்த தினம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த அக்கட்சி முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவிக்கும் போது பல வருடங்களாக அமைச்சரவையில் அமைச்சராக இருந்துவந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவினார். 

இதன் மூலம் முஸ்லிங்களுக்கான பலமான குரல் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை என்றும் அது இப்போது மீண்டும் எங்களுக்கு திரும்ப கிடைத்துள்ளதாகவும் விரைவில் மலரவுள்ள புதிய அமைச்சரவையில் மீண்டும் சக்திவாய்ந்த அமைச்சராக எங்களின் கட்சி தலைவர் வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அங்கு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய காங்கிரசின் ஆதரவாளர்களும், முக்கியஸ்தர்களும் வீதியால் சென்ற மக்களுக்கு பால்சோறு மற்றும் தாகசாந்திகள் வழங்கி தமது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :